இன்றைக்கு கோடிக்கணக்கில் இமெயில் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் தவிர, மெயில் செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் தவிர இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை.
பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.
ஒரு இமெயில் முகவரியை முதலில் பார்ப்போம். எடுத்துக்காட்டாக அது name@domain.com என இருக்கட்டும். நீங்கள் இமெயில் கிளையண்ட் ஒன்றை இந்த முகவரிக்கு மெயில் அனுப்பப் பயன்படுத்துகிறீர்கள்.
அது அவுட்லுக் மெயிலாக ஆக இருக்கலாம். இதனை மெயில்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தலாம். இதனை மெயில் யூசர் ஏஜென்ட் என அழைக்கின்றனர். மெயில்களை அனுப்ப இந்த மெயில் ஏஜென்ட்கள் சிம்பிள் மெயில் ட்ரான்ஸ்பர் புரோட்டோகால் என்னும் வழிமுறையைப் பின்பற்றுகின்றன.
இந்த வழி முறையைப் பின்பற்றி இன்டர்நெட் வெப் மெயில் சர்வருக்கு அனுப்புகின்றன. இமெயில் அனுப்புபவர் நேரடியாக இணையத்தில் இயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் என அழைக்கப்படுகின்றன.
பீல்டில் அனுப்பும் டொமைன் பெயரே இருந்தால் ஒரு எம்.டி.ஏ. லோக்கல் மெயில் பாக்ஸ்களில் (இமெயில் முகவரி உள்ள ஒவ்வொரு வருக்கும் அந்த முகவரியைத் தந்துள்ள இணைய சர்வரில் ஒரு மெயில்பாக்ஸ்ஒதுக்கப்பட்டிருக்கும்)முகவரிக்கான மெயில் பாக்ஸைத் தேடி அங்கே அந்த மெயில் சேர்க்கப்படுகிறது.
ஒரு வி.எஸ்.என்.எல். பயனாளர் இன்னொரு வி.எஸ்.என்.எல். பயனாளருக்கு அனுப்பும் வேளையில் இதுவே நடைபெறுகிறது. இந்த மெயிலைப் பெறுபவரின் மெயில் டெலிவரி ஏஜென்ட்.
இந்த மெயிலை போஸ்ட் ஆபீஸ் புரோட்டோகால் அல்லது இன்டர்நெட் மெசேஜ் அக்செஸ் புரோட்டோகால் என்னும் வழிமுறையின் மூலம் பெற்றுக் கொள்கிறது. பயன்படுத்தப்படும் வேளையில் இமெயில் செய்தியானது இமெயில் கிளையண்ட்டுக்கு அனுப்பப்படுகிறது.
No comments:
Post a Comment