ல இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துவருகிறது.
புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் சர்வதேச குழு கணித்துள்ளது.
ஆனால் ஏற்படக்கூடிய மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியும் என்றும், கரிமம் சுற்றாடலில் கலந்துவருவதை நாம் வேகமாக கட்டுப்படுத்தினால், மிக மோசமான பாதிப்புகளை நாம் தவிர்க்கவும் முடியும் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த அறிக்கையின் இறுதி வரைவில் ஆபத்துகள் சற்றே மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த அறிக்கைக்கு பங்களிப்பு செய்திருந்தவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாடுகள் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டச்செய்வதற்கு இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment