சர்ச்சைக்குரிய டுவிட்டர் குறிப்புக்கு எதிர்ப்பு
ஆப்பிரிக்காவில் உள்ள எயிட்ஸ் நிலைமை பற்றி சமூகவலைத் தளமான டுவிட்டரில் வெளியாகியிருந்த கருத்தொன்று(comment) இணைய தளங்களில் ஆத்திரத்துடன் கூடிய எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க பொது விளம்பர நிறுவனமொன்றைச் சேர்ந்த அதிகாரியின் டுவிட்டர் கணக்கில் இருந்தே இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்து வெளியாகியுள்ளது.
ஐ-ஏ-சி- என்ற பெரும் விளம்பர ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஜஸ்டின் சாக்கோ என்ற அந்த அதிகாரியின் டுவிட்டர் பக்கத்தில், 'ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறேன். எனக்கு எயிட்ஸ் தொற்றாது என்று நம்புவோமாக. விளையாட்டாகச் சொல்கிறேன். நான் வெள்ளையினத்தவர்!'(going to Africa. Hope I don't get Aids. Just kidding. I'm white!)என்று கருத்தொன்று வெளியாகியிருந்தது.
இந்த டுவீட் குறிப்பை சாக்கோ தான் பதிவு செய்தாரா அல்லது அவரது டுவிட்டர் கணக்கு ஹாக்கிங் செய்யப்பட்டுள்ளதா, அதாவது யாராவது அத்துமீறி திருட்டுத் தனமாக அவரது கணக்குக்குள் நுழைந்து இந்தக் குறிப்பை பதிவுசெய்துள்ளார்களா என்று தெரியவில்லை.
இந்த சர்ச்சைக்குரிய குறிப்புகள் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன. அத்தோடு ஐஏசி நிறுவனமும் இந்தக் கருத்துப் பதிவைக் கண்டித்துள்ளது.
குறித்த கண்டனம் வெளியாகியிருந்த சந்தர்ப்பத்தில் தமது பணியாளர் ஜஸ்டின் சாக்கோ வெளிநாட்டு விமானமொன்றில் பயணித்துக்கொண்டிருப்பதால் அவரது கருத்தைப் பெறமுடியவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜஸ்டின் ஆப்பிரிக்காவை வந்தடையும்வரை டுவிட்டர் பாவனையாளர்களும் காத்திருக்கிறார்கள்.
'ஜஸ்டின் வந்திறங்கிவிட்டாரா?' என்று டுவிட்டர் பாவனையாளர் ஒருவர் தனது பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment