அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இருவர், விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருக்க சத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Alien எனப்படும் வேற்று கிரக உயிரினங்களை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் SETI [search for extraterrestrial intelligence] ஆய்வு மையம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ளது. இதன் இயக்குனர் டான் வேர்திமர் மற்றும் தலைமை ஆய்வாளர் சேத ஷோச்டக், தங்கள் ஆய்வு குறித்து House Committee on Science, Space and டெக்னாலஜி-க்கு அளித்த அறிக்கையில் விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருக்க சத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும், கடந்த 50 ஆண்டுகளில் இதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய நிதி ஒதுக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்குள் நம்பத்தகுந்த தகவல்களை ஆராய்ந்து சரியான முடிவிற்கு வர இயலுமென அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment