ஸ்கைப் மற்றும் லிங்க் ஆகிய இரண்டு பிரபலமான அப்ளிகேஷன்களின் பயனாளர்களும் வீடியோ கான்ஃபரன்ஸ்மூலம் தொடர்புகொள்ளலாம். வரவிருக்கும் Lync Conference நிகழ்ச்சியின்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இயக்கிக் காட்டவுள்ளது.
அதே நேரத்தில் ஆண்ட்ராய்ட் டாப்லட்களுக்கான Lync அப்ளிகேஷனும் வெளியிடப்படும், Lync மற்றும் Ciscoவின் Tandberg Telepresence அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றத் தொடங்கும், Lync Online என்ற பெயரில் இயங்கும் Cloud அப்ளிகேஷனில் தொலைபேசி வசதிகள் சேர்க்கப்படும்.
‘சுருக்கமாகச் சொன்னால், நாங்கள் முற்றிலும் ஒருங்கிணைந்த ஒரு தொடர்பனுபவத்தை உருவாக்குகிறோம்’ என்கிறார் மைக்ரோசாஃப்ட் ஸ்கைப் மார்க்கெட்டிங் பொது மேலாளர் ஜியோவன்னி மெஜ்கெக், ‘எங்கிருந்தும் நீங்கள் எங்கள் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்திப் பலன் பெறலாம், அலுவலகத்துக்கோ, தனிப்பட்டமுறையிலோ!’
இதன்மூலம், மைக்ரோசாஃப்ட் தனது போட்டியாளர்களான சிஸ்கோ, அவயா, ஐபிஎம், சீமென்ஸ், கூகுள், அல்காடெல் லூசன்ட், மிடெல் மற்றும் ஷோர்டெல் ஆகியோரைவிடச் சில படிகள் முன்னேறிவிடுகிறது. உலகெங்கும் முப்பது கோடி பேரால் பயன்படுத்தப்படும் Skype, பெரிய நிறுவனங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள Lync ஆகியவரை ஒருங்கிணைவது எல்லாருக்கும் நல்லதே!
உதாரணமாக, Skype பயன்படுத்தும் ஒருவர் அங்கிருந்தே தன் வங்கியை அழைத்துப் பேசலாம். அவர்கள் Lyncமூலம் பதில் சொல்லலாம். இதுபோல் இன்னும் எண்ணற்ற பயன்பாடுகள்!
No comments:
Post a Comment