| தரவுச் சேவைகளை வழங்கும் 4G அலைவரிசை ஊடாக அதிக வேகத்தை சாத்தியப்படுத்தி சாதனை நிலைநாட்டியுள்ளதாக நொக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. 
தென் கொரியாவைச் சேர்ந்த வலைப்பின்னல் ஒன்றில் நொக்கியா அடைந்த வேகம் இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் வேகத்தை விட நான்கு மடங்கு அதிகமானது. 
நொக்கியாவும், எஸ்.கே. டெலிகொம் நிறுவனமும் ஒரு செக்கனில் 3.78 ஜிகா பிட் தரவுப் பறிமாற்றத்தை சாத்தியப்படுத்தி இருக்கின்றன. இந்த வேகத்தில் சுமார் 750 மெகா பைட் கொள்ளவுடைய ஒரு தமிழ் திரைப்படத்தை ஒரு செக்கனில் தரவிறக்கம் செய்துவிட முடியும். 
தனது கையடக்கத் தொலைபேசி உற்பத்திப் பிரிவை மைக்ரோ சொவ்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நொக்கியா நிறுவனம், தற்போது கணனி வலைப்பின்னல், தொலைத்தொடர்பாடல் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது. | 
Wednesday, 18 June 2014
Home
         Unlabelled
      
4G வலைப்பின்னலில் அதிவேக சாதனையை நிலைநாட்டிய நொக்கியா
 
No comments:
Post a Comment