பிரபல நிறுவனமான LG இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் அதிகளவான கைப்பேசிகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன்படி இக்காலப்பகுதியில் 15 மில்லியன் தொடக்கம் 16 மில்லியன் வரையான ஸ்மார்ட் கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
இதேவேளை கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட LG G3 எனும் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டு 5 நாட்களுக்குள் 100,000 வரை விற்பனையாகியிருந்தது.
தற்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளில் LG G3 கைப்பேசிக்கும் சிறந்த வரவேற்பு காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment