கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தில் மணி பார்க்கலாம் என்பது பழைய செய்தியாகப் போகிறது. கடிகாரத்தையே மொபைல் போனாக உபயோகிக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. தென்கொரிய நிறுவனமான சாம்சங் ஏற்கனவே ஸ்மார்ட் வாட்சை உருவாக்கிவருகிறது. சாம்சங் நிறுவனம் தனது கடிகாரத்தை ஸ்மார்ட் போனாக்கத் துடிக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்சை மொபைல் போனாக்குவது தொடர்பாக பல தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது இந்நிறுவனம். இந்த வாட்ச்-போனை வரும் ஜூன் அல்லது ஜூலையில் சந்தையில் புழக்கத்தில்விட சாம்சங் நிறுவனம் முயன்றுவருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தையில் மொபைல் புழங்கிய பின்னர் வாட்ச் அணியும் வழக்கம் குறைவது போல் தோன்றியது. இந்த வாட்ச்-போன் சந்தையில் வரத் தொடங்கிய பின்னர் அந்தக் குறை ஒருவேளை நீங்கிவிடலாம்.
No comments:
Post a Comment