Credit : ( Dell’s Official Flickr Page )
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களைக் கணக்கெடுத்தால், அதில் 25% பேர்தான் பெண்கள்.
புதிய தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்குவோர் யார் யார் என்று பார்த்தால், அதில் 10%தான் பெண்கள்.
ஏன் இந்த ஓரவஞ்சனை? பெண்கள் டெக்னாலஜி பொருள்களை வாங்குவதில், பயன்படுத்துவதில், இணையத்தில் ஆர்வத்தோடு இயங்குவதிலெல்லாம் முன்னணியில் உள்ளார்கள். ஆனால் தொழில்நுட்பத்துறையில் அவர்களுடைய பங்களிப்பு மிகக் குறைவு. ஏன்?
இந்நிலைமை கொஞ்சம் மாறிவருகிறது. இதற்குக் காரணம், யாஹூ தலைவர் மரிஸா மேயர்போல் இந்தத் துறையில் சிறந்து விளங்கும் ‘தலைவி’கள்தான்.
இன்னொருபக்கம், சொந்தமாகத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்கி நடத்தும் பெண்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களுடைய வெற்றிக் கதைகளை வாசித்தாலே போதும், மற்ற பெண்களும் இதில் கவரப்படுவார்கள்.
இந்தத் துறையில் நுழைய விரும்பும் பெண்களுக்கு ஐந்து வெற்றியாளர்களின் ஆலோசனைகள் இங்கே:
1. ஒரு நல்ல குழுவை உருவாக்குங்கள், அதில் உள்ள எல்லாரும் தனித்துவமான திறமைகள், அனுபவத்தோடு இருக்கவேண்டும். குறிப்பாக, உங்களிடம் இல்லாத திறமைகளைப் பிறரிடம் தேடிச் சேர்த்து குழுவை வலுவாக்குங்கள்: Joanna Weidenmiller, 1-Page
2. உங்களுடைய வழிகாட்டி, ஆதரவு நெட்வொர்க்கை உருவாக்கிக்கொள்ளுங்கள். வெளியிலிருந்து வரும் நல்ல யோசனைகள், அறிவுரை போன்றவை சவால்களைச் சமாளிக்க உதவும், உங்களுக்கும் தன்னம்பிக்கை தரும். Springboard Enterprises, Dell Women’s Entrepreneur Network, Dell Founders Club போன்றவை சிறந்த உதாரணங்கள்: Ingrid Vanderveldt, Dell
3. நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள், கடினமாக உழையுங்கள், மதிப்பைத் தரும் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள், மற்றவற்றைப் பிறருக்குக் கொடுங்கள்: Fran Hauser, Time Inc
4. உள்ளுணர்வை நம்புங்கள், மற்றவர்கள் செய்வதைப் பின்பற்றாதீர்கள், புதுமையாக எதையாவது உருவாக்குங்கள், குறிப்பாக, பெண் வாடிக்கையாளர்களின் கோணத்திலிருந்து யோசித்துச் செயல்படுங்கள்: Shauna Mei, AHAlife.com
5. ஆர்வத்தோடு இருங்கள், நிறுவனத்தின் வெற்றியே உங்களை நம்பிதான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு செயல்படுங்கள். அரைகுறைச் சூழல்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள், மனத்துக்குப் பிடித்ததை ஆர்வத்தோடு செய்து வெற்றி பெறுங்கள்: Deena Varshavskaya, Wanelo
No comments:
Post a Comment