இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக, மலிவு விலையில் ஸ்மார்ட்ஃபோன்களைத் தயாரிக்க உதவும் புது Processor ஒன்றைக் கண்டறிந்துள்ளது ARM நிறுவனம். இதன்மூலம், இன்றைய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பிரமாதமான வசதிகளுடன், குறைந்த விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிடலாம்.
ARM Cortex-A17 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த Processor இதற்குச் சமமான மற்ற Processorஐவிட 60% குறைவான ஆற்றலில் இயங்கும். இதனைக் கொண்டு இயங்கும் MediaTek என்ற சிப் ஏற்கெனவே வளரும் நாடுகளில் நன்கு பிரபலம். இப்போது அது அமெரிக்காவினுள்ளும் நுழைகிறது.
இந்த சிப் System On A Chip (SoC) என்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. இதில் எட்டு cores உள்ளதால் பிரமாதமான செயல்திறன் கிடைக்கும். 4K வீடியோ தொடங்கி, 20 மெகாபிக்ஸல் கேமெராக்கள், ப்ளூடூத் ஸ்மார்ட், ANT+ என்று அனைத்து சவுகர்யங்களையும் இதில் சேர்க்கலாம். இதனைப் பயன்படுத்தி $200க்குக் குறைவான விலையில் ஃபோன்களை உருவாக்கமுடியும் என்கிறார்கள்.
அமெரிக்காவுக்கு எதற்கு மலிவு விலை ஃபோன்கள்?
காரணம் இருக்கிறது. இதுவரை அங்கே விற்பனையான ஃபோன்களில் பெரும்பாலானவை அந்தந்த டெலிகாம் நிறுவனங்களின் மானியத்தோடு வெளியானவைதான். இனிமேல் அந்த மானியம் இருக்காது என்று தெரிகிறது. ஆகவே, அந்நாட்டு மக்களைக் கவர மலிவு விலை ஃபோன்கள் தேவை.
ஃபோன்மட்டுமல்ல, ஸ்மார்ட் டிவி தொடங்கிப் பல்வேறு கருவிகளில் இவ்வகை சிப்கள் பயன்படும். மற்ற நிறுவனங்களும் இதேபோன்ற சிப்களை வெளியிட்டால், சந்தைக்கும் நல்லது, வாடிக்கையாளர்களுக்கும் மிக நல்லது!
No comments:
Post a Comment