இன்றைக்கு நாம் நிறைய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் வகை, மிகப் பழையதாகவே இருக்கிறது. உதாரணமாக, விசிட்டிங் கார்ட்கள்!
MITயைச் சேர்ந்த TouchBase டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் இதனை டிஜிட்டல்மயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே சந்தையில் உள்ள டிஜிட்டல் பிஸினஸ் கார்ட்களில் உள்ள பிரச்னைகளை இவர்கள் கவனித்துச் சரி செய்துள்ளனர்!
இவர்களுடைய வாடிக்கையாளர்களும் விசிட்டிங் கார்ட்களைதான் எடுத்துச் செல்வார்கள். ஆனால் அவற்றில் அச்சிடப்பட்டுள்ளவிஷயங்களுக்குமேலாக, பல எலக்ட்ரானிக் சமாசாரங்கள் அதனுள் ஒளிந்திருக்கும். அதனை ஒரு ஸ்மார்ட்ஃபோன் திரையில் ஒற்றினால் போதும், அதில் உள்ள தகவல்கள் அந்த ஃபோனுக்குள் சென்றுவிடும்.
‘விசிட்டிங் கார்ட்களை முற்றிலுமாக நீக்க இயலாது என்பது எங்களுக்குப் புரிகிறது’ என்கிறார் TouchBase நிறுவனத்தின் தலைவர் சாய் தொ யெங். ‘அந்தப் பழக்கத்தை மாற்றாமல், டெக்னாலஜியைப் புகுத்துவதே சிறந்தது!’
இதற்கு, கார்ட்களைப் பெறுவோரிடம் TouchBase அப்ளிகேஷன் இருக்கவேண்டும். கார்டை ஒற்றியதும் அது அவரது புகைப்படம், மின்னஞ்சல், ஃபோன் நம்பர், ட்விட்டர், ஃபேஸ்புக் என்று சகலத்தையும் கொண்டுவந்துவிடும்.
‘இதனால், நீங்கள் எதையும் எப்போது மாற்றலாம்’ என்கிறார் சாய் தொ யெங். ‘உங்களுடைய விவரங்களை யார், எப்போது பார்த்தார்கள் என்பதையும் அறிந்துகொள்ளலாம்!’
இந்தத் தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகளும் உண்டு. ஐஃபோன் 5 மாடல்களில் செயல்படும் இந்த அப்ளிகேஷன், உங்களது Contacts Listல் விவரங்களைச் சேமிக்காது. அதனை ஸ்மார்ட்ஃபோன் திரையில் ஒற்றுவதற்கு நீங்கள் ஐஃபோனின் உறையைக் கழற்ற வேண்டியிருக்கலாம். விரைவில் இது ஆண்ட்ராய்டுக்கும் வரும்.
No comments:
Post a Comment