(image credit: Nouhailler)
எத்தனையோ டாக்ஸி பார்த்திருப்பீர்கள், படகு டாக்ஸி பார்த்ததுண்டா? ஃபேஸ்புக் அப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது!
இந்தப் படகில் 30 பேர் உட்காரலாம். சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கும் ரெட்வுட் சிடிக்கும் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும்.
படகில் செல்லும் ஃபேஸ்புக் ஊழியர்களுக்குக் காபி, ஸ்னாக்ஸ், இலவச வைஃபை இணையம் எல்லாம் உண்டு. கரை சேர்ந்தவுடன், பஸ்ஸில் ஏறி அவர்கள் ஃபேஸ்புக் அலுவலகத்துக்குச் செல்லலாம்.
இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், ஃபேஸ்புக் ஊழியர்கள் அலுவலகம் வந்து திரும்புவதால் அந்நகரின் போக்குவரத்து பாதிக்கப்படுவது குறையும். கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு முயற்சியில் கூகுளும் ஈடுபட்டுள்ளது.
இதற்கு என்ன செலவாகும்? வழக்கமான போக்குவரத்தைவிட இது சிறந்ததா? இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால், ‘மக்களுக்குத் தொந்தரவு இல்லாதவகையில் இவை செயல்படும்’ என்றுமட்டும் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment