பொருள் வாங்கக் கடைக்கு வருகிறவர்களை, விளக்குகளின்மூலம் ஈர்க்கும் ஒரு புதுத் தொழில்நுட்பத்தை முன்வைக்கிறது ஃபிலிப்ஸ் நிறுவனம்.
இதன்மூலம், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்தக் கடைக்குள் எந்த இடத்தில் உள்ளார்களோ, அதைப் பொறுத்து அவர்கள் தேடும் பொருள் எங்கே இருக்கிறது என்பதை எளிதில் கண்டறியலாம். இது LED மற்றும் மொபைல் அப்ளிகேஷன் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
இதன்மூலம் பொருள்களைக் கண்டுபிடிப்பதுடன், தள்ளுபடி விவரங்களையும் அறியலாம். ‘உங்களுக்கு வலதுபக்கம் மூணாவது ஷெல்ஃப்ல இருக்கற பிஸ்கட் வாங்கினா 20% தள்ளுபடி’ என்பதுபோல!
இப்படி வேண்டிய நேரத்தில் தள்ளுபடி விவரத்தைக் கொடுத்தால், அவர்கள் நிறைய வாங்குவார்கள் என்பதுதான் மனித மனம். ஆகவே, இதன்மூலம் கடையில் விற்பனையும் அதிகரிக்கும்!
அதுமட்டுமில்லை, வாடிக்கையாளர்கள் கடைக்குள் எந்த இடத்தில் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதுபோன்ற விவரங்களையும் இந்த ஏற்பாட்டின்மூலம் திரட்டலாம். அதை வைத்து அவர்களுக்கு ஏற்ற செய்திகளை அனுப்பி விற்பனையைப் பெருக்கலாம்!
No comments:
Post a Comment