ThinkLabs எனும் நிறுவனம் இலத்திரனியல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இதயத்துடிப்பு அறிகருவியினை (Stethoscope) அறிமுகம் செய்துள்ளது.
இது தற்போது பாவனையிலுள்ள சாதாரண இதயத்துடிப்பு அறிகருவிகளை விடவும் 100 மடங்கு வரை ஒலியை பிறப்பிக்கக்கூடியதாக இருப்பதுடன் இதயத்துடிப்பு வீதத்தினை துல்லியமாக கணித்து அறியத்தரக்கூடியதாகவும் இருக்கின்றது.
இதனை USB இணைப்பான் மூலம் சார்ஜ் செய்யக்கூடியதாக இருப்பதுடன், இதிலிருந்து பிறப்பிக்கப்படும் ஒலியினை iOS, Android, Mac மற்றும் PC சாதனங்களில் விசேட மென்பொருளின் உதவியுடன் பதிவுசெய்துகொள்ள முடியும்.
இதனைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது 499 டொலர்கள் செலுத்தி முன்பதிவு செய்வதன் மூலம் சில்லறை விலையான 799 டொலர்களில் இருந்து 300 டொலர்களை சேமிக்க முடியும் என ThinkLabs அறிவித்துள்ளது.
|
Wednesday, 18 June 2014
Home
Unlabelled
இலத்திரனியல் இதயத்துடிப்பு அறிகருவி அறிமுகம்
No comments:
Post a Comment